த(க)ண்ணீர்
ஏய் ! ஒட்டகமே ,
கொஞ்சம் கற்றுதாயேன்
என் தேசத்து மக்களுக்கும்
சேர்த்து வைக்கும்
வித்தையை !
பத்தடியில் அமுதாய்
கிடைத்த காலமாறி
பத்து ரூபாய்க்கு
வாங்கி பருகுகின்றோம்
பயணத்தில் பாட்டிலில்
அன்றோ !
பாரதி பாட்டினிலே ,
இன்றோ !
பாட்டிலிலே
வாழ்க்கையில்
எதிர் நீச்சல் போடவும்
வேண்டுமே -நீயெனக்கு
மஞ்சபையை,
அசிங்கமாயெண்ணி,
விதைத்து விட்டோம்,
பிளாஸ்டிக்(கை),
வீழபோவது,
வாரிசுகளென,
உணராமல்,
அவசர வாழ்கையில் .