குருவியின் நன்றி உணர்வு
ஒரு முறை இறைத் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது தோழருடன் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தார். அங்கே ஒரு மரக் கிளையில் குருவி ஒன்று கத்திக் கொண்டே இருந்தது. அதைக் கண்ட நாயகத்தின் தோழர் ஒருவர் ஏன் இந்த குருவி கத்திக் கொண்டே இருக்கிறது என்று கேட்டார்.
அதற்கு நபிகள், அந்த குருவிக்கு கண் தெரியாது அதனால் இறைவா, எனக்கோ கண் தெரியவில்லை நான் எப்படி இரை தேடி உண்பேன் என்று கூறி கத்துகிறது என்றார்.
அந்த நேரத்தில் அந்த பக்கம் பறந்து வந்த வெட்டுக்கிளி ஒன்று குருவியின் வாயில் விழ குருவி இந்த வெட்டுக்கிளியைக் கவ்வி விழுங்கியது. வெட்டுக்கிளியை உண்ட குருவி உடனே மீண்டும் கத்தத் துவங்கியது. இதைப் பார்த்ததும்
வியந்துப் போன தோழர் இப்போது மீண்டும் ஏன் கத்துகிறது என்று கேட்டார். நபிகள் நாயகம் உணவு கிடைத்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறது என்று பதிலளித்தார்.