உன்னையே காண்கிறேன்.

என்னதான் நான் என்னை
மாற்றிக்கொள்ள நினைத்தாலும்
என் மனம் முழுக்க உன் நினைவுப்பூக்கள்..

உன்னுடன் பேசக்கூடாது என்று
என் உதடுகள் கட்டளையிடுகிறது
ஆனால் என் மனம் அதை ஏற்பதே இல்லை..

உன்னை பார்க்ககூடாது என்று
கண்களை மூடிக்கொள்கிறேன்
மூடிய கண்களில் உன்உருவம்..

நான் காணும், நினைக்கும் அணைத்து
செயல்களிலும் உன்னையே காண்கிறேன்.......!!!

எழுதியவர் : ரெங்கா (9-Jan-11, 6:30 pm)
சேர்த்தது : renga
பார்வை : 457

மேலே