துயரைப் போக்கும் கை !

குறிப்பு:-) இறை அருள் கவிமணி பேராசிரியர் கா . அப்துல் கபூர் அவர்களின் அரும் பூ என்ற கவிதை தொகுப்பிலிருந்து ! நன்றி )

காட்டில் சிங்கம் வாழும் கை - குகை
நாட்டின் சிறப்பைக் குலைக்கும் கை - pakai

பாரில் வறிஞர வாழ்த்தும் கை - ஈகை
போரில் வெற்றி காட்டும் கை - வாகை

ஆடும் மயிலின் அழகுக் கை - தோகை
நாடும் பெரியோர் தலையில் கை - பாகை

மிக்க நாணம் மேவும் கை - மங்கை
தக்க அன்பைப் பொழியும் கை - தங்கை

பாண்டி வேந்தன் பண்புக் கை - பொற்கை
பாண்டி நாட்டின் செல்வக் கை - கொற்கை


தொடரும் .

எழுதியவர் : (14-Oct-13, 7:13 pm)
சேர்த்தது : mohd farook
பார்வை : 82

மேலே