நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே
உன் பிரிவின் துயரம் தாங்க
என் நெஞ்சு பொறுக்குதில்லையே
வலிமை நிறைந்த உன் தமிழ் கவிதையை
இனி எங்கு காண்பேன்..??
கண்ணதாசனை இழந்தோம்
நான் இருக்கிறேன் என்று நீ நின்றாய்
இனிக்கும் கவிதை வரிகளை தந்தாய்
உன் போன்ற கவிஞன் இனி உலகில்
நான் காண்பேனா...?
நீ வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன்
என்று பெருமை பட்டேன் பல நாள்
ஆனால் நீ இன்றி அனாதையாக
தனிமையில் தள்ளபட்டேன் இன்று
என் அருமை கவிஞனே
உன் புகழ் என்றும் இப்பார் புகழ
விளங்கும்..உன்னை நான் சினிமா
கவிஞனாக காணவில்லை
எம் மக்கள் எம் மொழி காக்கும்
குலமகனாகவே கண்டேன்
இனியும் காண்பேனோ உன் முகத்தை
இனியும் கிடைப்பாயோ நீ எங்களுக்கு
உன் ஆத்மா என்றும் அடையும் சாந்தி ...
ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹி ....