தேடுகிறேன்....................!!!!!

தேடினேன்...................................!!!!!
அமைதியான இரவுகள்!
அன்பான உறவுகள் !
அரவனைக்கும் கரங்கள்!
அரணான எல்லைகள்!
அற்புதமான படைப்புகள்!
அழகான விழிகள்!
அழிவிலா செல்வங்கள்!
அடிபடாத குழந்தைகள்!
அழிக்கப்படாத புல்வெளிகள்!
அடிக்கப்படாத விலங்குகள்!
அறுக்கப்படாத மரங்கள்!
அசைக்க முடியாத மலைகள்!
அழகான கவிதைகள்!
அணையில்லா ஆறுகள்!
அசிங்கமில்லா வழ்வுகள்!
அரசியலில் புதுமைகள்!
ஆழமான சிந்தனைகள்!
ஆரோக்யமான மனிதர்கள்!
ஆனந்தமான நேரங்கள்!
ஆச்சரியமான உண்மைகள்!
ஆரவாரமில்லா விழாக்கள்!
ஆவேசமில்லா பேச்சுகள்!
ஆழமில்லா மணல் மேடுகள்!
ஆபாசமில்லா திரைப்படங்கள்!
ஆணவமில்லா மனிதர்கள்!
ஆழ்நிலையில் தியானங்கள்!
ஆலயத்தில் கடவுள்கள்!!
ஆன்மாவின் உறைவிடங்கள்!!!
தேடுகிறேன்.............................!!!!!
சஹானா