தோழியே...தோழியே...தோழியே...555

தோழி...தோழி...

பெண்ணின் மனது
ஆழம் என்கிறார்கள்...

பெண்களை
புரிந்து கொண்டால்...

அவர்கள் எல்லாம்
கவிதைதான்...

நிலவும் பெண்ணும்
ஒன்றுதான் என்கிறார்கள்...

நிலவுக்கு
தேய்பிறை உண்டு...

பெண்ணவள் மனதில்
நினைத்துவிட்டாள்...

தேய்பிறை இல்லை
அவள் மனதில்...

வளர் பிறையே...

என்றும் விண்ணில்
மின்னும் விண்மீனாய்...

பெண்கள் அடிமைதான்
அதிகாரத்திற்கு அல்ல...

உண்மை அன்புக்கே...

ஆண்கள் முகம் பார்க்கும்
கண்ணாடி அல்ல...

பெண்கள் ஒரு
நாட்டின் கண்கள்...

புரியாத
புதிரும் அல்ல...

அவர்களை
புரிந்து கொண்டால்...

வாழ்வில்
கவலையும் இல்லை...

புது கவிதைதான்
பெண்கள்...

படித்து பார்க்க முழற்சி
செய்யுங்கள்...

ஒரு முறையேனும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (14-Oct-13, 7:02 pm)
பார்வை : 414

மேலே