தீவிரவாதிகள்
அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத
இந்த மனித வாழ்க்கையில்,
திட்டம் வகுத்து மனித உயிர்களை அழிக்க
அனுமதியும் அதிகாரமும்
யார் இவர்களுக்கு கொடுத்தது...?
யார் இந்த தீவிரவாதிகள்...?
மனித உருவில் வரும் இரக்கமற்ற எம தூதர்களே...!
மண்ணில் மனிதனாக பிறந்தும்,
மனிதனாக வாழத் தெரியாத கோழைகளே..!
தனது வேலைப் பளுவை
குறைத்துக்கொண்டிருக்கும்
தீவிரவாதிகளை எண்ணி
எமதர்மன், அகம் மகிழ்வானோ...?
இல்லை, வாழ வேண்டிய
நல்ல உள்ளங்களும், பிஞ்சு இதயங்களும்
மாய்ந்து கொண்டிருப்பதை எண்ணி
வேதனை படுவானோ...? புரியவில்லை...!
தீவிரவாதிகள், இரக்கமற்றவர்கள் தான்,
ஆனால் இதயமற்றவர்கள் அல்ல...
அவர்களின் செயலுக்காக இதயத்தை
குறை சொல்வது நியாயம் அல்ல...!
தீவிரவாதிகள் இதயங்கள்
அனைத்தும், வேதனையால்
துடித்துக்கொண்டேதான் இருக்கின்றன...
இரக்கமற்ற இந்த கொடியவர்கள் உயிர் வாழ
நாம் ஏன் துடிக்க வேண்டும் என்று....?
"தற்கொலை" என்பதின் பொருள் புரிந்தால்,
அவர்களின் இதயங்கள் அனைத்தும்
துடிப்பை நிறுத்திவிட்டு நிச்சயம்
தற்கொலை செய்து கொள்ளும்....!
கொள்கையற்ற இயக்கங்களை நடத்திக்கொண்டு,
நாளும் உயிர்பலி நிகழ்த்துகின்றனர்..
அதனை "புனிதப்போர்" என்றும் போற்றுகின்றனர்..
மனிதர்களுக்கு தெரியும் "புனிதம்" என்பதின்
பொருள் என்னவென்று...
பாவம், அரக்கர்களாய் வாழ்ந்துகொண்டிருக்கும்
அவர்களுக்கு அப்பொருள் விளங்குவது சற்று கடினமே...!
உலக நாடுகள் அனைத்தும்
மார்த்தட்டிக்கொண்டே தான் இருக்கின்றன...
ஆயுத பலத்தில் தாங்கள் தான் வல்லவர்கள் என்று...!
இன்றுவரை அவர்களின் ஆயுத பலத்தால்
தீவிரவாதம் என்ற கொடியவனை
ஒடுக்கவோ, அழிக்கவோ முடியவில்லை...
சற்றே விந்தையாக இருக்கிறது...!
மனிதனுக்கு மட்டுமே இயற்றப்பட்டதால் தான்
என்னவோ தெரியவில்லை,
மனித நேயமும், இரக்கமும் இல்லாத
இந்த அரக்கர்களை, "சட்டத்தினால்" கூட
தண்டிக்க முடியவில்லை...
இதற்கு விடிவுக்காலம்
என்றுமே வராது போலும்...!