உயிரில் கலந்த உறவே என் சகியே 555
என் சகியே...
மொட்டுவிட்ட மலரை
தொட்டு செல்லும்
தென்றலை போல...
சொல்லிவிட்ட என்
ஆசைகளை ஏற்று கொண்டாயடி...
ஒருமுறை மாமா என்று
என்னை அழைக்க கேட்டேன்...
உன்னிடம்...
என்னை நீ அழைக்கும்
போதெல்லாம்...
துடிக்கும்
என் இதயத்தில்...
பல வண்ணத்து பூச்சிகள்
பறக்குதடி எனக்குள்ளே...
என்னை தொட்ட
வெண்ணிலவே...
தினம் தினம் ரசிகிறேனடி
உன் விழிகளில் என்னை...
மலரின் மனம்
தென்றலில் வந்தால்...
வண்டுகள் வரும்
தேனெடுக்க...
உன் குரல் கேட்டால்
ஓடி வருகிறேனடி...
உன் பூ முகம் காண...
ஊரறிய உனக்கு
மணமாலையிட்டு...
உன் கை பிடித்து அழைத்து
செல்ல வருவேனடி நான்...
நாளை என் சகியே.....