விஞ்ஞான உலகம் !!

"மாறிய உலகும் அழகு தான்"
பெற்றது கைநிறைய,இழந்தது பைநிறைய !
பச்சை மரங்கள் வேரோடு அழிக்கப்பட்டன !
சிகப்பு விளக்குகளை தலையில் தாங்கி வானுயர்ந்து நிற்கும் சிகப்பு வெள்ளை மரங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன !
பச்சிளம் குழந்தையையும் துள்ளிக் குதிக்க வைக்கும் சின்னஞ்சிரு குருவிகள்
பலவற்றை அடியோடு அழித்தோம் !
கிழக்கும் மேற்க்குமாய் விர்ரென்று பறக்கும் விமானங்களை பெற்றோம் !
நீர்,நிலம்,காற்று இதில் எதை விட்டு வைத்தோம் நாம் !
நீர்: குடிநீரைக் கூட வியாபாரமாக்கிவிட்டான் மனிதன்
குடிநீரின் உண்மை சுவையை மறந்து பல காலம் ஆயிற்று !
நிலம்: விவசாய நிலங்கள் வீடுகளாகவும்,தொழிற்சாலைகளாகவும் மாறிவிட்டன !
வந்தார்க்கெல்லாம் பொன்னும் பொருளும் கொடுத்த பழம்பெரும் நாடு இன்று ஒரு
வேலை சோற்றுக்குக் கூட அயல்நாட்டிடம் கையேந்தி நிற்க்கிறது !
காற்று: கலப்படம் மனிதனுக்கே உரித்தான செயல் போல காற்றைக் கூட
அவன் விட்டுவைக்கவில்லை !
ஆனால் ஒன்றை நினைத்து பெருமை கொள்கிறேன் !
காடுகளை அழித்த நாமே அதை மீண்டும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்
""கான்கிரீட் காடுகளாக"" !!
........ஆக்னல்........