மரணப் படுக்கைக்கு செல்லும்வரை ...
சிந்தையையும் மனதையும் கொன்று
திங்கும் கொலைகாரந்தான் உங்களின்
அன்போ அன்பர்களின் நினைவோ ?...
பாவம் அவர்களும் என்னதான்
செய்வார்கள் ? உங்களுடன் அன்பை
கொண்டதால் உள்ளத்தால் உயிரிழந்து
உடலால் நினைவகன்று நிஜங்களை
மறந்து இயல்பை வெறுத்து
கனவை ரசித்து வால்வினறம்
அகன்று கண்ணை கெடுத்து
கல்வியை துறந்து காற்றையும்
யாசித்து பூவையும் தொடுத்து
என்ணத்தை எறிந்து குருதி
நின்று மனதை குலைத்து
அன்பை தொலைத்து மரணத்தை
நேசித்து தனிமையை விரும்பி
இறுதியாய் பித்தம் பிடித்ததுபோல்
சித்தம் கலங்கி வாழும்
நிலைதான் உங்களின் அன்போ ??
மனதிற்கு தெரியாது பொய்யன்பென
மரணப் படுக்கைக்கு செல்லும்வரை ...