நட்பு

நாம் புன்னகைக்கும் போது
நட்பு அரும்பாகிறது,
புன்னகை நேசமாகும் போது
நட்பு மலராகிறது,
நேசம் பாசம் ஆகும் போது
நட்பு மணம் வீசுகிறது - அந்த
மணம் நல்ல சோலையில் வீசும் போது
ஒரு வசந்தகாலம் உதயமாகிறது.

எழுதியவர் : சீ. நித்யலக்ஷ்மி (18-Oct-13, 2:40 pm)
Tanglish : natpu
பார்வை : 468

சிறந்த கவிதைகள்

மேலே