நட்பு பிரிவில்லை
முதல் நாள் நீ
அறிமுகம் இல்லாத
பூனைக்குட்டி
எனக்கு....
அமைதியாய் இருந்த
அந்த நாள்
உன் தயக்கம்
தெரிந்தது..
காலமும் மெல்ல
ஊர்ந்து சென்றது...
கள்ளமில்லா உன்
நட்பு
என் மனதின் கதவை
தட்ட
திறந்து உன்னை
வரவேற்றேன்...
அன்பு மலையில்
நனைந்த எம்மை
நட்பு கொஞ்சம்
கட்டியணைக்க
நண்பர்களாய்
மாறிவிட்டோம்...
நட்பின் நினைவுகள்
நிறைந்து இருக்க
மனதின் கதவு
மூட மறுக்கிறது
பிரிவின் நேரம்
நெருங்குகையில்....
இன்னும் எத்தனை
நாட்கள்
நம் நட்பை நட்பை
செதுக்க
கிடைக்கும்...
பிரிந்து விட போகிறோம்
நட்பையல்ல
நம் உடல் மட்டும்
சிட்டுக்குருவிகளாய்
பல திசைகளில்......