MURUGAN

முருகா முருகா
முத்துகுமரா குமரா
கந்தா கந்தா
கதிர்வேலா வேலா (முருகா

உன்னை பாடும் நெஞ்சில்
குடியேற வா
என்றும் உன்னை பாடும்
எண்ணம் நீ தருவாய் (முருகா


சீரலைவாயில் சூரனை கொன்றாய்
திருப்பரங்குன்றில் வீரனாய் நின்றாய்
பழம் இல்லை என்றதும் பழனியில் நின்றாய்
பழமுதிர்சோலையில் பழமாய் நின்றாய் (முருகா

அப்பனுக்கு பாடம் சொல்லி சுபபனாய் நின்றாய்
தப்பென உணர்ந்து தணிகையில் நின்றாய்
அறுபடைவீடு மட்டும் உன்வீடு இல்லை
அகில உலகமே நீ வாழும் எல்லை (முருகா

இருவரை மணந்து இடமாறி நின்றாய்
ஒருவரே போதும் என்று உணர வைத்தாய் (முருகா

எழுதியவர் : S K MURUGAVEL (18-Oct-13, 2:41 pm)
சேர்த்தது : S K MURUGAVEL
பார்வை : 425

மேலே