வெற்றி நிச்சயம்.....
ஒவ்வொரு விடியலும்
ஏதோ ஒரு காரணங்களோடு தான்
பிறக்கின்றது ...
அதை புரிந்து கொள்வதில் தான்
பலருக்கு வெற்றிகள் பிறக்கின்றது ...
தன்னம்பிக்கையின் முதல் படிகள்
சருக்கலாக இருப்பினும் தொடர்ந்து
சென்றால் அதுவே சாதனைகளின்
துவக்கமாக இருக்கும்.... .
எந்த விருட்சமும் முதலில் மண்ணில்
புதைந்தே விண்ணை தொடும்
மறந்து விடாதே .....
தோல்விகள் உன் வாழ்வின் முடிவல்ல ..... அது
வெற்றியின் ஆரம்பம்..... தோழா
தொடர்ந்து செல் .... துணிந்து நில் .....
வெற்றி நிச்சயம்.....