அரசியல் அலர்ச்சி

ஏமாற்றும் வார்த்தை
களவாடும் வித்தை
இதுவல்லவோ
இன்றைய அரசியல்...!

ஐவிரலை எதிர்த்து
இருவிரல்
இருவிரலை எதிர்த்து
ஐவிரல்
இவ்விரல்களுக்கு
கையும்,
சுத்தியல் அரிவாளும்
நட்சத்திரமும்
மாம்பழமும்
பம்பரமும்
மாறி மாறி கூட்டு
அவ்வப்போது ஆதரவு
அவசியத்தின்போது எதிர்ப்பு.

சின்னத்தில் வீழ்ந்த வாக்களார்கள்
நாங்கள் சின்ன புத்திக்காரர்கள்
வாக்களிக்க தேவை துட்டு -நாங்கள்
நாற்காலிக்கு வளர்க்கப்பட்ட பலிஆடு
எங்கள் முதுகில் குத்திகொண்டோம்
“இளிச்சவாயன்” சின்னத்தில் ஓட்டு

உடன்பிறப்பே..!
இரத்தத்தின் இரத்தமே..!
தோழர்களே..!

எல்லாம் வார்த்தை
மாய ஜாலங்கள்
தண்ணீரில் வரையப்பட்ட
அழகிய கோலங்கள்
நம்பி நம்பியே
ஆண்டு ஆண்டாய்
துண்டும்
வேஷ்டுயும்
பறிகொடுத்த
பாரி வள்ளல்கள்
நாங்கள் வாக்களர்கள்.
அம்மணமாக
தன்மானத்தை தேடும்
தமிழர்கள்.

அடத்தூ.. !
எங்களுக்கு புத்தியும் இல்லை
எதிர்க்கும் சக்தியும் இல்லை
கோவணத்தையாவது
மிச்சம் விட்டார்களே..!
அதற்காகவேனும்
தலைவர்களே நன்றி !!

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (19-Oct-13, 12:11 pm)
பார்வை : 244

மேலே