சம்மதம் தான்!

தாய்மையில்!

உடலும் உயிருமாய் இருப்போம் என்றால்
வலி தான் எனினும்
நூறு பிள்ளைகள்
பெற்றெடுக்கவும் சம்மதம் தான்!

நட்பில்!

வாடாமல் இருப்போம் என்றால்
உயிர் இல்லை எனினும்
காகித பூக்களாய்
இருக்கவும் சம்மதம் தான்!

காதலில்!

பிரியாமல் இருப்போம் என்றால்
எதிர் துருவங்கள் எனினும்
முள்ளும் மலருமாய்
இருக்கவும் சம்மதம் தான்!

எழுதியவர் : மது (19-Oct-13, 12:38 pm)
பார்வை : 75

மேலே