ஆகாயம்

வானம் ஒரு பருத்திக்காடு
விண்மீனும் ஒரு பஞ்சுக்கூடு
மேகம் எங்கும் பஞ்சாய் ஓடுதே
வெண்ணிலவும் தேடி ஒன்றாய் சேர்க்குதே

வானவில்லின் சாயம் கொண்டு
ஆதவன் வெப்பம் கொண்டு
ஆழி நீறு கொண்டு- ஆகாயம்
அழகான ஆடை நெய்யுதே

ஆழி கொண்ட நீரெல்லாம்
ஆதவன் கதிர் பட்டு
கோழி கூவும் முன்
கொத்தாக மேலெழும்பி

தோழியே வாவென்று
தொடுவானம் கையசைக்க
வாழி நீ வாழி நீ என்று
வையகம் வாழ்த்துதம்மா

அன்பு கொண்டு மேகமெல்லாம்
அருகருகே வரும்போது
அன்போடு கொடுத்த முத்தம்
அகிலமெல்லாம் இடிக்கிறதே

நீர் கொண்ட நிலமெல்லாம்
ஊராக மாறுவதை கண்டு
உணவின்றி உலகம் உய்யாது என்று
கண்ணீர் மழை பொழிகிறதே

எழுதியவர் : S K MURUGAVEL (19-Oct-13, 1:38 pm)
பார்வை : 992

மேலே