காதலின் தன்னடக்கம்

தனிமையில் உன்னுடன் பேச
தயக்கம் தடுக்கும்,
தயங்கி உன்னை நெருங்க
நடுக்கம் எடுக்கும்
கால்கள் நகராது நிற்க
நேரம் நகர்ந்தோடும்...
விரல்கள் உன்னை தொட
விரைத்து போகும்...
எட்டு இமைகளும்
எட்டாயிரம் முறை தொட்டுக்கொள்ள,
நான் மட்டும்
ஏன் இப்படி நடுங்குகிறேன்...
எத்தனை நிமிடம் தான் இப்படியே தவிப்பது...
காதலின் தன்னடக்கமா இது..!!?

எழுதியவர் : கண்ணன் (19-Oct-13, 1:49 pm)
பார்வை : 117

மேலே