சிறுவரியில் ஒரு பா !

வானத்து வட்ட நிலா
வந்து தரை இறங்கிய
தங்க நிலா !
பார்த்துச் சொல்லுவேன்
சின்ன நிலா !
பார்க்காது போனால்
என்ன நிலா !
உள்ளத்தை கொள்ளையிடும்
ஆசை நிலா !
உயிரில் நிறைந்த
உறவு நிலா !
ஓடோடி வரும்
மழலை நிலா !
முத்தத்தை நிறைக்கும்
மகிழ்ச்சி நிலா !
மனதில் நிறையும்
எங்கள் நிலா ! யாவர்க்கும்
தங்க நிலா !!


நட்பில் nashe

எழுதியவர் : nashe (19-Oct-13, 1:55 pm)
பார்வை : 92

மேலே