உனக்கு எழுதும் கவிதைகள்...[3]

அன்று
ஒரு கவிதையைத் தந்தேன்
உனக்கு

இன்று
உன்னை
அந்தக் கவிதை தந்தது
எனக்கு !
[8]
**********

உனது லட்சியம் எதுவென
என்னிடம் கேட்கிறார்கள்

எப்படிச் சொல்வேன்
உன்னைக் காதலிப்பதுதான்
என்பதை !
[9]
***********

உன் வீதி வழியிலும்
உன் வீட்டைச் சுற்றியும்
எத்தனை முறை அலைவது
உன்னைப் பார்க்க

என்னையே பார்த்திருக்க
எப்போது வருவாயோ
எனக்குள் !
[10]
*********

மேலே வீசிய எதுவும்
கீழே விழுந்து விடுகிறது
புவி ஈர்ப்பு விசையால்

நான் எங்கே இருந்தாலும்
இழுத்து விடுகிறாய்
விழி ஈர்ப்பு விசையால் !
[11]
*********

கவிதைகள் தொடரும்...

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (19-Oct-13, 4:01 pm)
பார்வை : 155

மேலே