இயற்கை எழில்மிகு தொட்டாசிணுங்கி
கவியின் கவியுரை:
கண்ணில் கண்டேன்
கலையும் ஆடைதொட வெட்கம் மூடக்கண்டேன்;
எண்ணம் கொண்டேன்
இவ்வெழில் இசைபாட என்னி லேக்கம் கண்டேன்;
தொட்டாசிணுங்கியின் கவியுரை:
கண்டேன்,
சீதைபொன் பாதம்பட வழிகொண்டேன்;
பாதம்பற்றப் பாய்ந்தஅலைகளில்
பாவம்நீங்கிக் கற்றேன் "பவித்ரநாணம்" -
இது சீதை யெமக்களித்த தானம்!
கவியின் கவியுரை:
கண்ணில் கண்டேன்
கலையும் ஆடைதொட வெட்கம் மூடக்கண்டேன்;
எண்ணம் கொண்டேன்
இவ்வெழில் இசைபாட என்னி லேக்கம் கண்டேன்;
- A. பிரேம் குமார்