காதல்

ரோஜா முட்களை
தான் வைத்துகொண்டு
இதழ்களை கொடுப்பதே காதல்

என் காதலை விட
உன் மகிழ்ச்சியே
எனக்கு முக்கியம்

இந்த ஜென்மம் மட்டுமல்ல
இன்னும் பல ஜென்மங்கள்
என்னை காதலித்து
ஏமாற்றினாலும் பரவா இல்லை

என் உயிரே
என்னை ஏமாற்றும்
உரிமையும் உன்னை தவிர
வேறு யாருக்குடா உண்டு !!!

என்னை காயப்படுத்தியதாக
எண்ணிக் காயப்பட்ட வேண்டாம்
என் உயிரே அதுவே எனக்கு
வலியினை தரும்

என் மனம் கண்ணீரில்
மிதந்தாலும் அது உன்னால்
என்று மகிழ்கிறதே
எந்தன் மானம் கெட்ட மனது .

இன்னொரு ஜென்மத்திலும்
என்னை காதலித்து ஏமாற்று
என் தேவதையே !!!!!!!!!!!!!

உனக்காக கண்ணீர் விட
இப்போதே கண்ணீரை
சேமித்து வைக்கிறேன்

எழுதியவர் : செமினா (12-Jan-11, 3:52 pm)
சேர்த்தது : semina
Tanglish : kaadhal
பார்வை : 457

மேலே