அவள் வரவுக்காக
அவள்
காதலின் இன்பத்தை
எனக்கு
கற்றுத்தந்தவள்?
கண்ணுக்குள்
கனவாக
நெஞ்சுக்குள்
நினைவாக நின்று
என்
நித்திரையை கலைத்தவள் ?
உயிர் ஓட்டமாக
இதையத்தின்
காதல் நரம்புகளை
உசுப்பி விட்டவள் ?
அவளுக்காக
காத்திருப்பது
பார்த்திருப்பது
எல்லாமே நித்ய
சுகம் ?
அவளின்
காலடி ஓசைக்காக
காத்திருக்கின்றன் ?
எக்கேனும்
அவளின் பாத சலங்கைகள்
எதிரொலித்தால்
தயவு செய்து என்
கண்கள் அவள் வரவுக்காக
காத்திருக்குமென கூறுகள்?