மனம் வேண்டுதே உன்னை
ஒரு கவள அகம்
ஆனது ரணம்
வேண்டுதே மனம்
உனையே இக்கணம்
செப்படி உறவே
எதில் இல்லை சோகம்
தெளிவாய் நீயும்
இருப்பாய் நாளும்
கொள்வாய் மோகம்
அன்பின் மேல் நாளும்
உயிர்க்கு பகையே
மௌனம் அறிவாய்
விடுப்பாய் மௌனம்
வெல்வாய் அகத்தை
வருவாய் நீயும்
கனிவுடன் நாளும்
மகிழ்ந்தே இருப்பேன்
தினம் உனக்காய்த் துதிப்பேன்
இருப்போம் நாமே
ஒன்றாய் கணமும்
போகும் இனிதே
ஒவ்வொரு நாளும்
வளைத்தும் விடுவோம்
தரணியும் தானே
வெல்வோம் நாமும்
பலர்அகம் நாளும்
Urs
Rs Av