(26)தந்திர காட்டில் நான் (4) உள்முக தரிசனம் -(கார்த்திக்)
![](https://eluthu.com/images/loading.gif)
தத்துவதரிசனம் (8)
விளைவுகளை எண்ணியபடி
எத்தனை நாள் வாழ்வாய்
என்றாவது நீ எண்ணிய
விளைவுகளே நடந்துள்ளதா ?
செய்யும் செயல்களில் உனது
பிரக்ஞயை அதிகரித்துவிடு
தீவினையும் மாய்ந்து போகும்
நல்வினையாவும் வந்து சேரும் !!!
தத்துவதரிசனம் (9)
உனது கோமாளித்தனத்தை
எண்ணி கலங்காதே -அதற்குள்ளும்
புத்திசாலித்தனம் இருந்தால்
வாழ்கையே சுவாரஸ்யத்தை
நோக்கி பயணம் செய்ய
தொடங்கி விடும்
உலகமே உனது கோமாளித்தனத்தை
பின்பற்றவும் கூடும் !!!
தத்துவதரிசனம் (10)
உலகத்தில் சத்தியமே
படைக்கப்பட்டுள்ளது
உலகத்தில் மாயை என்ற
ஒன்றே கிடையாது
மாயை உள்ளத்தில்
உள்ளது எப்போதெல்லாம்
ஒரு உருவத்திற்குள்
உனது உள்ளமும்
ஊடுருவுகிறதோ அங்கெல்லாம்
சத்தியம் மறைகிறது
மாயை உருவாக்கபடுகிறது !!!
************(தத்துவதரிசனம் தொடரும் )***********
என்றென்றும் அன்புடன்
கார்த்திக்