திருந்தனும் சிறுகதை

கையூட்டு பெற்ற அரசு அலுவலர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது - தினசரி செய்தியை படித்து முடித்தார் .நாடே கெட்டுப்போச்சு என்று அலுத்துக் கொண்டார் அப்புசாமி. பாருங்க நேத்து ஆபீசுல பெரிய அதிகாரி ஆய்வு நடத்தினாராம். எல்லாம் தப்பா இருந்துச்சாம் இரண்டு நபர்களை தண்டித்து விட்டாராம். அந்த ஆபீசர் பற்றி எல்லாரும் பெருமையாக பேசினார்கள் . அப்போது அங்கு வந்த சின்ன மாமா எல்லாம் திருட்டுபசங்க. இதுல மாட்டிக்கிட்டவன் சின்னதிருடன். இந்த சின்னத்திருடனை தண்டிப்பவன் பெரிய திருடன். சின்னத்திருடன் கொஞ்சமா லஞ்சம் வாங்குவான், பெரிய திருடன் பெருசா வாங்குவான். இதுதான் இப்ப பேஷன். லஞ்சம் கொடுக்கிறவன் "ஏன்டா கொடுக்கணும் லஞ்சம்னு ஒதைச்சாத்தன் இந்த பயலுவ திருந்துவானுங்க". எப்போ ?...இது ..? நடக்கும் !!!1.

எழுதியவர் : thanam (24-Oct-13, 11:04 pm)
சேர்த்தது : தில்லை நாதன்
பார்வை : 117

மேலே