தொலைந்துகிடக்கிறேன் ...!!!!


முகவரியில்லா
இடங்களில்
தொலைந்துகிடக்கிறேன்

எந்த தடயமும்
இல்லாமல்
தொலைந்திருக்கிறேன்

ஆசைகளாலும்
நிராகரிப்பாலும்
சிதறிக்கிடக்கிறேன்

வாழ்வில்
சிதறிக்கிடக்கும்
என்னை
தேடுகிறேன்

எந்த தடத்தில்
தேடுவதெனவும்
தெரியவில்லை

ஆகையால்
யாரும்
என்னை
தேடாதிர்கள்
முதலில்
என்னை
நான்
தேடிக்கொள்கிறேன் .....!!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (13-Jan-11, 5:12 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 346

மேலே