தாய் ஒருத்தியை தேடுதடி

கணவன்மார்களே மனைவிமார்களே
கரமொன்று வரமாகக் கிடைக்காதா என்று
காத்துக் கிடக்கின்றன காப்பகத்தில்
மழலைச் செல்வங்கள்
பால்மணம் மாறிடும் பல் முளைத்திடும்
தவழ்ந்திடும் தத்தி நடந்திடும் ஓடிடும்
ஓடி விழுந்திடும் அழுதிடும்
அள்ளி அணைக்கியிலே மலர்ந்து சிரித்திடும்
கர்பத்தில் தரிக்கவிட்டால் என்ன
காப்பகத்தில் பெற்றால் என்ன
மாசற்றதடி மழலையின் முத்தம் !
கையாட்டி கூப்பிடுதடி
கைகொட்டிச் சிரிக்குதடி
தாவி வருகுதடி
தாய் ஒருத்தியைத் தேடுதடி
கண்மணியே கனி அமுதே என்று
கட்டி அணைத்திட தவிக்குதடி !
தாயாகிட தவமிருந்தது போதும்
ஆழ்கடல் அலையில் நீராடியது போதும்
ஆலயம் நூறு வலம் வந்தது போதும்
அணைத்திடும் கரங்கள் அன்பு ஆலயம்
அங்கே மழலை தெய்வம் !
தாய்மை ஒரு ஆராதனை !
~~~~கல்பனா பாரதி~~~