கடலின் அளவும் கடுகே -நட்பின் முன்னே

கரைகள் இல்லாத கடலே
என் கண்ணே உந்தன் அன்பு -அதில்
முத்தாய் மூழ்கிக்கிடக்க
மனம் எந்நொடியும் ஏங்கித்தவிப்பு.....

மூச்சை பிடித்து மூழ்க
நி பேரலைகடலோ அல்ல
என் மூச்சை நீளச்செய்யும்
உனையென் ஆயுள் மூச்செனக்கொல்ல.....

மனதின் வலிமை பெருக்கும்
பல வளங்கள் உன்னில் உண்டு
அவை எந்தன் மேலே படர்வது
என்னை அழகாய் மாற்றுவதென்று.....

கலங்கரை விளக்குச் சொல்லும்
நம் நட்பு கடலே என்று
நம் நட்பின் அளவோ சொல்லும்
எங்கள் கடலோ வற்றாதேன்று.....

எழுதியவர் : செ.காமேஷ் வரன் (26-Oct-13, 7:33 pm)
சேர்த்தது : monishammu
பார்வை : 179

மேலே