என் நிழல் உன்னை தொடராது 555
பெண்ணே...
உன்னை என் மனதில்
நினைத்த வினாடி முதல்...
உன்னை கேட்காமலே...
உன்னிடம் பல
உரிமைகள் கொண்டேனடி...
பாசத்தோடு சில
கட்டளைகள்...
எனக்கு கட்டளை இட
நீ யார் என்கிறாய்...
உரிமையாக பேசினால்
யார் என்கிறாய்...
உன்னோடு உறவாட
முடியாவிட்டாலும்...
உன் நலம் விரும்பியே...
எனக்கோ வேதனைகள்
தருகிறாயடி கண்ணே...
காரணமின்றி...
வலி தாங்கிய
உள்ளம்தான்...
உன் வார்த்தைகளை தாங்க
முடியவில்லையடி...
என் வார்த்தைக்கும் எனக்கும்
இல்லாமலே செல்கிறாய்...
கலங்கும் விழிகளில்
கண்ணீர் இல்லையடி...
இனியும் உனக்கு அன்பு
கட்டளை இட நான் யார்...
மன்னித்துவிடு என்னை...
கட்டளை மட்டுமில்லை...
உன்னில் நான் இல்லை
புரிந்து கொண்டேனடி...
இனியும் என் நிழல்
உன்னை தொடராது...
மன்னித்துவிடு அழகே.....