அம்மா

இன்னல்கள் பட்டு ஈன்றெடுத்த பொழுதிலும்,
இன்பமுற்றாள் என்முகம் காண்கையில் !

அவள் குருதியின் பாதியை பாலாக்கி,
குளிரச்செய்தாள் என் பசியை!

ஈக்கள்,எறும்புகள் என்பல
என்னிடம் அண்டாமல்
எதத்னை நாள் பார்த்தாள்!

தவழச்செய்தாள் ! நடக்கச்செய்தாள் ! ஓடச்செய்தாள்! பேசச்செய்தாள் !
வீரர்களின் கதைகள் சொல்லி வீரனாக்கினாள்!

அகிம்சை வாதிகளின் கதைகள் சொல்லி
தர்மத்தை என்னுள் நிலைக்கச்செய்தாள் !

என் தாய் நாட்டிற்கோ நானொரு குடிமகன்னென்றால்!
என் தாய்க்கு நான்தான் பேரரசன் - ஆம்!

அவளது கிழிந்த சேலைதான் எனது
ரத்தின கம்பளம்!
அவளது மடிச்சதையோ நான் உறங்கும்
பஞ்சு மெத்தை!
அவளது அன்பு தழுவளே எனது
பாதுகாப்பு கவசம்!
போர்கள் மட்டும் இங்கு இல்லை- காரணம்
இங்கு எதிரிகள் என்ற இலக்கு இல்லவே இல்லை!

இன்பம் துன்பம் இரண்டையும் பகிர்பவள் மனைவியென்றால்!
இன்பம் எல்லாம் எனக்களித்துதுன்பம் மட்டும் தானே ஏற்பவள் அல்லவா தாய்!

இவள் இறைவனுக்கு இணையனவள்தான்,
இவள் கோவில் கட்டி கும்பிடப்பட வேண்டியவள்தான்!

இவளது சேவை கடல் போன்றது ,
இவளுக்கு எவ்வளவு சேவைசெய்தாலும்
கடுகு போன்றதே.........!

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (13-Jan-11, 7:42 pm)
சேர்த்தது : a.naveensoft
பார்வை : 401

மேலே