மழை காதலர்கள்

உன்னை
தாங்கி கொள்ள
காத்திருக்கும் பூமி....
உன்னை
வண்ணமாய் வரவேற்று
காத்திருக்கும்
வானவில்......
உன்னை
அனைத்து விளையாட
காத்திருக்கும்
சிறுவர் கூட்டம்....
உன்னை
கவிதையாய் எழுத
காத்திருக்கும்
கவிஞர்கள்.....
யாவரும்
காத்திருக்கிறோம்
மழை காதலர்களாய் ....
மழையே!
நீ யாரிடம்
சொல்ல போகிறாய்
உன் காதலை....