நண்பர்கள்

புவியில் பூக்கும் அழகிய
நறுமனமுள்ள பூக்கள் !

மனம் எனும் வானில்
உயர உயர பரக்கச்செய்யும்
வண்ணமயமான சிறகுகள் !

சோதனை எனும் சூழ்கடலை
சுலபமாய் கடக்கச்செய்யும்
பலம் பொருந்திய துடுப்புகள் !

தடை எனும் பெருமலையை
சுக்குநூறாய் தகர்த்தெரியும்
உறுதியான உளிகள் !

நம்மை அழகுற
செதுக்கும் சிற்பிகள் !

நம்மின் குறைகளை
நேரடியாய், நேர்த்தியாய்
பிரதிபளிக்கும் கண்ணாடிகள் !

நம் புகழை எட்டுதிக்கும்
பாடித்திரியும் வானம்பாடிகள் !

சிரிப்பு, அழுகை, ஏற்றம், இரக்கம்,
வெற்றி, தோல்வி, வாழ்வு, சாவு - என எல்லாவற்றிலும் மனதார
பங்கு கொள்ளும் பங்குதாரர்கள் !

சுடர் விட்டெரியும் ஆதவனாய்!
குளிர்ந்த முழு மதியாய்!
கண்களை இமைக்கும் நட்சத்திரங்களாய்!
பாரம் தாங்கும் புவியாய்!
உயிர் வாழ செய்யும் சுவசக்காற்றாய்!
இன்னும் யாதுமாகியாய் நண்பர்கள் !

அன்னையின்றி,ஐயன்னின்றி,
அருமை உடன்பிறப்புகள் ஒன்றுமின்றி
காதலுமின்றி- வாழுமே !
உயிர் - நட்பின்று வாழாதது....!

எழுதியவர் : -நவீன் மென்மையானவன். (13-Jan-11, 8:30 pm)
சேர்த்தது : a.naveensoft
பார்வை : 411

மேலே