தோழியின் மனம்

உன்னிடம் சொல்வதற்கு
எந்த செய்தியும்
இல்லை என்றாலும்
உன்னிடம் பேச
வார்த்தைகளை தேடுகிறது
என் வாய்
உன்னிடம் கொடுப்பதற்கு
எந்த பொருளும்
இல்லை என்றாலும்
உன்னிடம் பரிமாறி கொள்ள
காற்றில் உலாவுகிறது என் மனம்
உன்னை நினைக்கும் போது
சந்தோஷத்தில் சத்தமிடுகிறது
என் இதயம்
இவையாவும் அர்த்தமற்றதாய் இருப்பினும்
ஆனந்தமாய்தான் உள்ளது எனக்குள்





எழுதியவர் : (13-Jan-11, 8:43 pm)
சேர்த்தது : nithyajenifer
பார்வை : 411

மேலே