எதிர்பார்ப்பு

உன் கைகோர்த்தபடி
மழையில் நனைய வேண்டும்.
உன் விரல் பிடித்தபடி
வாழ்வின் எல்லைவரை நடக்க வேண்டும்.
உன் மார்பில் சாய்ந்து
என் மரணம் வரை வர வேண்டும்.
நல்லவனே!
நால்வர் அறிந்தும் நானறியா
என்னவனே!
எனக்காய் பிறந்தவனே,
எங்கிருந்தாலும் வந்து சேர்ந்துவிடு,
என்னோடு
நான் சுவாசிக்கும் காற்றையும்
நேசிக்கிறேன்.
உன் சுவாசம் என...........