காக்கையும் நரியும் கணினி காலத்தில்

பாப்பா பாப்பா
கதை கேளு
காக்க நரியின்
கதை கேளு

ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்திச்சாம்.அந்த காக்காக்கு பசி எடுத்திச்சாம் . அக்கம் பக்கம் பாத்திச்சாம். அப்ப அது கண்ணுல ஒரு பாட்டி வாடா சுட்டு வைக்கறத பாத்திச்சாம். பறந்து போயி பாட்டிக்கிட்டருந்து ஒரு வடைய திருடிக்கிட்டு ஒரு மரத்து மேல வந்து குந்திக்கிச்சாம். அப்போ, மரத்தின் கீழே ஒரு குள்ளநரி, காக்கா வாயில வடையை பாத்திடிச்சாம். உடனே காக்கையை ஏமாத்தி வடையை தின்ன நினைசுடுத்தாம். காக்காவப் பாத்து, நீ ரொம்ப அழகா இருக்கே .. உன் வாயும் ரொம்ப நீண்டு இருக்கு. நீ ஒரு பாட்டு பாடினா ரொம்பவே நல்லா இருக்கும்ன்னு எங்க முப்பாட்டன் பலரும் சொல்லி இருக்காங்க. நீ ஒரு பாட்டு பாடேன்ன்னு சொல்லிச்சாம். காக்கைக்கு அப்போ அவங்க அம்மா-அப்பா சொன்ன ஒரு சங்கதி ஞாபகம் வந்திச்சாம். உடனே, வடையை மரத்தில் வச்சுட்டு, கா கா ன்னு பாடிச்சாம். குள்ளநரிக்கு என்ன செய்யறதுன்னு தெரியாம காக்காவையே பாத்திச்சாம். அப்போ காக்கா .. குள்ள நரியே .. குள்ள நரியே .. எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே ன்னு ஒரு பழைய சினிமா பாட்ட பாடிச்சாம். வெட்கி தலை குனிந்து குள்ளநரியும் ஓடி போயிடுச்சாம்.

காக்கா .. கா கா ன்னு கத்தறத கேட்ட ஒருத்தன் .. காகம் கரையும்ன்னு சொல்லி வச்சானாம். ஆனா .. கா கா ன்னு காக்கா .. காப்பாத்து .. காப்பாத்து ன்னு சொல்லிச்சாம். அன்னிக்கு ஏமாந்த காக்கா கணினியை கத்துக்கிட்டு புத்திசாலியா ஆயிடுச்சாம்.

எழுதியவர் : (27-Oct-13, 10:34 am)
பார்வை : 1105

மேலே