முறைத்தேனும் என்னை பாரடா
மனதுக்குள் மறைந்து போன
என் காதலுக்காய்
உன்னிடம் ஒருமுறை
கேட்கிறேன்..
உன் உயிரை அல்ல
நீ சுவாசித்த காற்றை
சற்றே
சுவாசித்து சாவதற்கு..
தினம் தினம்
தடுமாறும்
எந்தன் பாதையில்
என்றாவது
உந்தன்
பாதம் தொட
சரிந்து போன மணல் மேடாய்
சாய்ந்து கிடக்கிறேன்..
தினம் தினம்
தீண்ட வேண்டாம் ..
அருகே உந்தன்
வாசம் வேண்டாம்..
சாய்ந்து கொள்ள நீ வேண்டாம்..
நடை பழக
தூர பயணம் வேண்டாம்..
உறவு வேண்டாம்..
உரை வேண்டாம்..
உந்தன் காதல் வேண்டாம்..
ஒரே ஒரு முறை
முறைத்தேனும் என்னை பாரடா..
மோட்சம் பெறட்டும் எந்தன் காதல்.....!