காதல்

காதல்..
கொலை செய்யும் மந்திர வார்த்தை..
காதல்..
விடையில்லா விந்தை வினா..
காதல்..
பார்வை தொடும் பயங்கர பாதை..
காதல்..
கரை மறைந்து போன கானல் கடல்..
காதல்..
காற்றில் கரைந்து போன கண்ணீர் ரசாயனம்..
காதல்..
உணர்வை தீண்டும் உயிர் விளையாட்டு..
காதல்..
இதயம் தேடும் இன்பதாகம் ..
காதல்..
பிரிவை பேசும் உண்மை சரித்திரம்..
காதல்..
தனிமை விரும்பும் தன்னல உலகம்..
காதல்..
உறைந்துபோகும் இரு உயிர்களின் உறைவிடம்..
காதல்..
சத்தமின்றி நெஞ்சை பிளக்கும் கொடூரன்..
காதல்..
புதிராய் மனதை புரட்டும் புதையல்..
காதல்..
விழிகள் பேசும் மௌன மொழி..
காதல்..
கால்கள் தீண்டாத கனவு உலகம்..
காதல்..
காத்திருப்பை கற்றுத்தரும் கல்லூரி..
காதல்..
பரிதவிக்கும் தாய் இழந்த சேய்..
காதல்..
காரணமற்று புன்னகை செய்யும் களவாணி..
காதல்..
இன்ப நதி சேர துன்பம் கலந்த துரித பாதை..
காதல்..
மென்மையாய் உயிரை துளைக்கும் இறகு..
காதல்..
கல் எரிந்தும் உடையா கண்ணாடி..
காதல்..
மின்னலை தாகும் மின்மினி பூச்சி..
காதல்..
களவு செய்தும் தண்டனை பெறாத திருடன்..
காதல்..
ரேகையாய் பதிந்து போகும் நினைவுகள்..
காதல்..
புன்னகை வீசும் பயங்கர புயல்..
காதல்..
பூமி கண்டிட பரிதவிக்கும் இன்னொரு உலகம்..
காதல்..
வலியின்றி சேதம் தரும் அழகான விபத்து..


பூமி எங்கும் சிதறி கிடக்கும்
உயிர்களின் உன்னத உறவு தான்
காதல்..காதல்..காதல்..

எழுதியவர் : பிரியா கண்ணன் (27-Oct-13, 12:26 pm)
Tanglish : kaadhal
பார்வை : 93

மேலே