மரணமற்ற கவிதை எழுது--அகன்

கவிதை ,
வரிகளின் இடைவெளி அல்ல:
சொற்களின் கொலு அல்ல:

அர்த்தங்களே தகுதி உரை
உனது கவிதைக்கு...!!
...
அர்த்தங்களின் ஆழப் பரப்பு
நிலைக்கும் கவிதை..
ஆழ எழுது...அழ எழுதாதே....!!

பழக பழக பாக்கள் வரும் -பழங்கதை இது..
சுவாசம் செய்ய பழகியா பிறப்பெடுத்தோம்..!??
கவிதைகளுக்குள் மனிதம் புகுத்து
மனித மனங்களில் சொற்களைத் தேடு
கவிதை உன்னுடன் பழகி விடும்..!!

எட்டாவது நிறம் பெற்ற
வானவில்லாய் இருக்கட்டும்
உனது கவிதை...!
ஏழாவது சுரம் காணாத
எட்டாவது சுரமாய் உன் கவிதை
எனில் சரியே...!!
ஏழு சீரோடு வள்ளுவன் முடித்த பாக்களுக்கு
எட்டாவது சீராய் உன்ன கவிதை
எனில் வாழும்...!!

விடியும் பொழுதுக்கு மட்டுமல்ல
உன் கவிதை -
முடியும் பொழுதின் வெளிச்சத்திற்கும்
எழுது கவிதை...!!
விமர்சன
தீக்குள் மூழ்கவும்
நீரில் அமிழவும்
அணியாமாகும் கவிதையே கவிதை
மற்றவை அன்னியமானவை உனக்கு.!!

ஒரு சொல்லில்
நூறு கோடி அர்த்தங்கள்
தருகிறதா உன் கவிதை ?

பிறகேது அதற்கு மரணம்..!!!
உலகக் கண்கள் உன் முகத்தில் .
பார் இப்போது...!!

இப்போது சொல்
நீ இதுவரை எழுதியது
கவிதையா சொல்.....
...

எழுதியவர் : அகன் (27-Oct-13, 12:45 pm)
பார்வை : 144

மேலே