27 தந்திர காட்டில் நான் 4 உள்முக தரிசனம் -கார்த்திக்
தத்துவதரிசனம் (11)
உலகத்திலேயே மிக சக்தி வாய்ந்த வெடித்தல்
பரிபூரணமாய் நம்மை நாமே இழப்பதுதான்
வெறுமையாகி போதல்
எதையும் அடக்காமல் அடங்கி போதல்
உலகமே ஒன்றே ஒன்றுக்காய்
காத்துக்கிடக்கிறது என்றால் அது
சாஸ்வதமான அமைதி மட்டுமே
ஆகையால் அமைதியில் திளைத்திருக்க
கற்றுகொள்
தத்துவதரிசனம் (12)
பூக்கும் பூவிடமிருந்து
பூரண ரகசியத்தை கற்றுகொள்
முழுமையான புத்திசாலித்தனமும்
ஒரு நாளில் மலர்ந்து உதிரும்
பூவுக்குள் இருக்கிறது
காலத்தில் மலர்ந்து
காலத்தில் உதிர்கிறது
முழுமையான மலர்தலும்
முழுமையாக உதிர்தலும்
பூகம்பம் கூட பூவின்
மலர்ச்சிக்கு முன் வெறும் தூசிதான்
ஏனெனில் அதன் முழுமலர்வு
பூகம்பத்திடம் இருப்பதில்லை !!!
தத்துவதரிசனம் (13)
வாழ்வுக்காய் எல்லாவற்றையும்
இழக்க கற்றுகொள் -ஆனால்
இன்றோ மனிதர்கள் மற்றவற்றுக்காய்
வாழ்கையை இழக்கிறார்கள்
வாழ்க்கைஎனும் வேர்கள்
மகாமௌனமெனும்
தண்ணீரை எதிர்பார்த்தபடி
காத்துகொண்டிருக்கிறது -என்றாவது
தனது முழு மலர்ச்சியை
எய்துவிடமாட்டோமா என்றபடி !!!
************(தத்துவதரிசனம் தொடரும் )***********
என்றென்றும் அன்புடன்
கார்த்திக்