எழுத்தே நட்பே

நீ நெருப்பு !
அறிவேன் நான்
தீபமாக...

நீ சூரியன் !
ரசிதேன் நான்
அந்தி மஞ்சளாக...

நீ நிலா !
எழுதினேன் நான்
பெளர்ணமியில்...

நீ மழை !
நனைந்தேன் நான்
சிறு தூறலில்...


எழுத்துக்களே... !
என்னாயிற்று ?
சற்று நாட்களாக........
தீபம் தறிகெட்டு எரிகிறது
அந்தி மஞ்சள் சுட்டெரிக்கிறது
பெளர்ணமி ஒளி இழக்கிறது
சிறு தூறல் பெரு வெள்ளமாகிறது

யார் மீது கோபம் ?
எவர் மீது ஊடல் ?
அவரா உன் எதிரி?
இவரா உன் சகுனி?

கட்டுப்படுத்தி
நடை மாற்றி - நட்பு
உடை உடுத்தி...
வருவாயா ?

காத்திருக்கிறது
என் உயிர் “மை”
உனை எழுதும்
பேனாவிற்காக........

இப்படிக்கு,
நட்புடன்
என்னுடன் நம் தோழர்கள்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (29-Oct-13, 1:11 am)
பார்வை : 286

மேலே