பரிசின் பொருள்
பரிசின் பொருள்
*********************
வீர சிவாஜி,தன குருவான ராமதாசரிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார்.ஒரு முறை சிவாஜி ராமதாசருக்கு ஏராளமான பொன்னும்,மணியும் பரிசாக அனுப்பினார்.அவற்றைப் பெற்ற ராமதாசர்,கையளவு மண்,சில கூலாங்கற்கள்,கொஞ்சம் குதிரை சாணம்,ஆகியவற்றை சிவாஜிக்கு பரிசாக அனுப்பினார்.அதைப் பார்த்த அனைவரும் கோபப்பட,சிவாஜி மட்டும் புன் முறுவலோடு சொன்னார்,''என் குரு தீர்க்க தரிசனத்துடன் அனுப்பிய பொருட்கள் இவை.இந்த மண்,முகலாயரின் ஆதிக்கத்திலிருந்து நாடு முழுவதையும் நான் ஜெயிப்பேன்,என்பதைக் குறிக்கிறது.கூலாங்கற்கள்,எனது நாட்டை வலிமை மிக்க கோட்டைகளால் பாதுகாப்பேன் என்று காட்டுகின்றன. குதிரையின் சாணம்,எண்ணற்ற மாவீரர்கள் அடங்கிய குதிரைப் படையை நான் அமைப்பேன் என்பதை உணர்த்துகிறது.''
நன்றி ; இருவர் உள்ளம் தளம்
படித்த சிறு கதைகள்