மழலை அமுதம் --எழில்

உதிரத்துச் சாற்றினில் உருவா னங்கம்
உலகைப் புரட் டிப்போட வந்த சிங்கம் !
புதிரான இளஞ்சிரிப்பு பலநே ர மெனைப்
பூரிக்க வைத்துமன மீட்டிய வீணை !
சதிராடும் கடலலையில் கரையொ துங்கும்
சங்கெனவே சிறுதூளியிலா டுகின்ற தங்கம் !
எதிரியென எவர்வரினும் எட்டி உதைக்கும்
ஏற்றமிகு பூம்பாதம் அசைந்தே வதைக்கும் !
பூமிமகள் மேனியினைப் பூங்கையால் வருடி
புவியீர்ப்பு விசைதன்னைப் பூம்பா தத்தில்
குமியும்படி குவித்துவைத் தழுத்தி டுவானே
காந்தப்புலம் விரல்நுனியில் நிறுத்தி டுவானே
நிமிடத்தில் வெண்ணிலவை நிலத்தில் . வேண்டுவான்
நிலாச்சோறு ஊட்டியபின் உறக்கம் கொள்வான்
யாமிருக்கப் பயமேன்என அபயக் கரத்தினை
யானைத்துதிக் கைபோல உயர்த்திக் காட்டுவான் !
சின்னஞ்சிறு மாவடுக்கண் சிமிட்டிநி லவுக்கு
சீர் ஒளியை த் தந்துகுளிர் ஊட்டி டுவானே
முன்னரிந்த நாடாண்ட மூவேந் தர்கொடி
முகத்தினிலே காட்டிவரும் மாமன் னவனே
கன்னங்குழி காட்டி ஒளி முத்தென ஒளிரும்
கலைவிளக்கோ குலதெய்வமோ கருணைக்
கடலோ
மின்னல்என மனத்துயரை நீக்க வந்த
மன்னவனே மோகனரா கமென வாழ்கவே !
************எழில் **********