சகுனமும் சலனமும்

காகம் கரைகிறது
எட்டிப் பார்த்தேன்
சாளரம் வழியே
யாரையும் காணவில்லை .

பல்லி சொல்லுகிறது
எத்திசையில் இருந்து
என்று நோக்கினேன் ஆவலாக
ஒன்றும் நடக்கவில்லை .

பூனை குறுக்கே போகிறது
புறப்படும் போது
வீபிரிதம் ஏற்படுமோ என்று அஞ்சினேன்
யாதொன்றும் நடக்கவில்லை

சகுனமும் சலனமும்
ஒன்றே கூடின்
தவிர் ப்பது தவிர வழியில்லை
நமபினால் அவ்வாறே

நம்பாவிடில் அவற்றை
பின் தள்ளி செல்ல
முனைவது அழகு
பெருமையும் அது வே.


காகமும் பல்லியும்
கிளியும் பூனையும்
நற் செயலுக்கும் தடை க்கும்
எவ்வாறு காரணமாகும்.





.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (30-Oct-13, 2:34 pm)
பார்வை : 124

மேலே