முதலும் இரண்டாவதும் முழுவதும்
பாட்டில் பொருள் கண்டான்
இசையில் இன்பம் அடைந்தான்
நாட்டியத்தில் சுகம் விளைந்தான்
நடிப்பில் மதி மயங்கினான்
தன்னை முதலாக இழந்தான்
வடிவில் அழகைக் கண்டான்
விளைவுகளில் நிம்மதி அடைந்தான்
உடல் சூட்டில் குலாவி மகிழ்ந்தான்
வண்ணங்களி ன் ஜாலத்தில் மயங்கினான்
தன்னை இரண்டாவதாக இழந்தான் .
கோப்பையில் ரசனைக் கண்டான்
போதையில் தஞ்சம் அடைந்தான்
நாகரிகத்தில் த ன்னை மறந்து கூ த்தாடினான்
நிர்ணயத்தை தன்னை அறியாமல் விட்டு விடடான்
தன்னை முழுவதுமாக இழந்தான்