தமிழ்ப் பெயர்கள்
ஆயிரம் தமிழரில் நூறுபேர்கூடத்
தமிழ்ப் பெயரைக் கொண்டிலர்
மீதியுள்ள தமிழர் எல்லாம்
இந்திப் பெயர்களைத்தான் சுமந்து திரிகின்றார்.
இந்தி மொழியைப் பேசுகின்ற
எத்தனைபேர் தம்மழலையர்க்கு
தமிழ்ப் பெயர்சூட்டி மகிழ்கின்றார்?
தருவீரா சான்றேனும்!
புத்தன் ஏசு பிறப்பதற்கு முன்பே
வளம் பெற்றிருந்த நந்தமிழில்
சொற்களா இல்லை
பிள்ளகளுக்குப் பெயர் சூட்ட?
பொருள் தெரியாமல் ஓசைமட்டும்
போதுமென்ற மனத்தோடு
இந்திப் பெயர்க்ளை வெறித்தனமாய்
பிள்ளைகளுக்குச் சூட்டுவதா?
’ஷியாம்’ என்றால் கருப்பைய்யா
‘ஷ்யாமளா’' என்னவென்று உங்களுக்குத் தெரியும்.
‘ஹேமலதா’ என்றால் பொற்கொடி
’புஷ்பலதா’என்றால் மலர்க்கொடி
‘சுந்தர்’ என்றால் அழகன்
;ஜெயக்குமார்’ என்றால் வெற்றி மகன்
‘பிருந்தா’ என்றால் துளசி
’ஜோதி’ என்றால் ஒளி
‘பிரகாஷ்’க்கும் அதே பொருள்தான்.
‘கல்பனா’ என்றால் கற்பனை
’கமலா’வும் ‘பத்மா’வும் தாமரையாகும்.
‘ஜெயசிறி’ என்றால் வெற்றிச் செல்வி
‘கனகா’ என்றாலும் தங்கம்
‘ப்ரியா’ ‘பிரேமா’ என்றாலும் அன்பானவள்.
‘சூர்யா’ என்றால் கதிரவன்
‘விஜய்’ என்றாலும் வெற்றி.
இந்த்ச் சான்றுகள் போதுமே
இந்திப் பெயர்களின் பொருளும் விளங்குமே
இனியேனும் பிள்ளைகட்கு தமிழ்ப் பெயர்சூட்டி
இளந்தளிர்களைக் கொஞ்சி மகிழ்வீர்!
குறிப்பு: நான் எந்த மொழிக்கும் எதிரானவன் இல்லை."யாதும் ஊரே யாவரும் கேளிர்” “வசு தைவ குடும்பகம்” என்ற முது மொழிகளைப் போற்றுபவன், தமிழர்களே தமிழைக் கேவலப்படுத்துவதைத்தான் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. நான் சொன்ன இந்திப் பெயர்களின் அர்த்தம் தவறாக இருப்பின் எடுத்துக்காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.