மனித நேயம்

கதைக் களம் பத்து வருடங்களுக்கு முன் .
இடம் - தத்தனேரி லெவல் கிராசிங்.

தத்தனேரி லெவல் கிராசிங்கில் கேட் திறந்திருக்கும் நேரத்தை விட மூடி இருக்கும் நேரம் தான் அதிகமாய் இருக்கும். இது மாதிரி விசயங்களில் மதுரை காரர்களுக்கு பொறுமை அதிகம்.
மதுரை சந்திப்பு அருகே இருப்பதால், பயணிகள் வண்டிகள், கூட்ஸ் வண்டிகள், ஷெட்டுக்கு போகும் வண்டிகள் என்று மாறி மாறி போய்கொண்டு இருக்கும்.

காலை பத்து மணி,நல்ல வெயில்.வழக்கம் போல கேட் போட்டு,இரண்டு பக்கமும், மூன்று வரிசையில் தாறுமாறாக கார்கள், பஸ்கள், இரண்டு,மூன்று சக்கர வாகனங்கள் நெருக்கி அடித்து நிற்கின்றன. கேட் திறந்தவுடன்,நான் முந்தி , நீ முந்தி என்று பந்தய குதிரை போன்று
பாய்வதற்கு தயாராக உள்ளன.

லெவல் கிராசிங் என்றாலே,பாலம் மாதிரி மேடு தட்டி, இரண்டு பக்கமும் சரிவாக தான் போடவேண்டும் என்பது ஹை வேய்ஸ் காரர்களின் எழதப்படாத விதி போலும்.

விஷயத்திற்கு வருகிறேன், பொறுமையை சோதித்து, முப்பது நிமிஷத்திற்கு பிறகு கேட் திறந்தது. வண்டி ஓட்டுனர்களெல்லாம் தாம் செய்வது தான் சரி என்று, முன் போவதற்கு முந்தி போவதிலே குறியாய் இருக்கிறார்கள்.
இந்த இடஞ்சலிலே, மீன் பாடி மூன்று சக்கர சைக்கிள் நிறைய இளநீர் ஏற்றிக் கொண்டு நிற்கிறான் குருசாமி.

பாத்திமா காலேஜ் முக்கிலே,நேரத்திலே போய் கடை போட்டு வியாபாரம் சூடு பிடித்தால்,நாலு காசு பார்க்கமுடியும். வலுவான உடம்பு,சம தளத்தில் வண்டியை ஓட்டி விடுவான் குருசாமி. சோதனை மேல் சோதனையட சாமி என்பது போல் ஒரு அழுத்து அழுத்தி நகர்த்தி விடலாம் என்று அழுத்தினால், நகர்வேனா என்கிறது வண்டி.மேடு ஏறி விட்டால் அப்புறம் பிரச்சினை இல்லை.

பின்னால் உள்ள கார்கள் ஹாரன் அடிப்பதிலே குறியாய் இருந்து,சத்தம் காதைப் பிளக்கிறது.யாராவது ஒரு கை கொடுத்து நெட்டி தள்ளி விட்டால் பிரச்சினை முடிந்தது.அவர் அவர்களுக்கு அவர்கள் பிரச்சினை .

தன் இரண்டு சக்கர வாகனத்தை ஓரமாய் நிறுத்தி விட்டு, உடன் குருசாமியின் உதவிக்கு வந்தார் பெரியவர் பரமசிவம்.அவர் வாழ்க்கை ஜீவனம் LIC ஏஜென்ட். தன் உடை,தன் நிலை பார்க்காமல் உதவி என்ற போது உடன் வந்து உதவியது தான் உதவி.அது தான் மனித நேயம்.

எழுதியவர் : arsm1952 (30-Oct-13, 8:07 pm)
சேர்த்தது : arsm1952
Tanglish : manitha neyam
பார்வை : 205

மேலே