ஆத்துல இருந்து வாரேன்-சிறுகதை

லட்சுமணன் வழக்கம் போல எழுந்தவுடன் ஆத்துக்கு போய் குளித்துவிட்டு தன் கம்பேனிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தான். லச்மணனின் தாயாரும் அவனுக்கு சாப்பாடு கட்டிக்கொண்டிருந்தாள்.திடிரென லட்சுமணன் அலறிக் கொண்டு கீழே விழுகிறான். என்னவோ எதோ என்று பதறி அடித்துக் கொண்டு செல்கிறாள் தாயானவள்.அவனைக் கண்டு கதறுகிறாள்.கணவனும் வெளியூர் சென்று விட்டதால் அருகில் உள்ளவரைத் துணைக்கு கூவி அழைக்கிறாள்.வந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.லட்சுமணன் மூர்ச்சையாகி கிடக்கிறான். அங்கிருந்த சிலர் அவனை ஆட்டோவில் எடுத்துக் கொண்டு டாக்டரிடம் செல்கிறார்கள்.மருத்தவமனை நெருங்கியதும் அவன் அனைவரும் ஆச்சிரியப் படும் வகையில் எழுந்து உட்காருகிறான். என்ன நடந்தது என்று புரியாத அவன் பிதற்றுகிறான். உடன் சென்றவர் அவனுக்கு ஆறுதல் சொல்லி நடந்தவற்றை விளக்குகிறார்கள்.அவனும் பழைய நிலைக்கு திரும்பிவிடுகிறான்.என்றாலும் கூட அவனை மருத்துவரிடம் சென்று காண்பிக்கின்றார்கள். அவரும் பரிசோதித்துவிட்டு ஒன்றும் இல்லை என்று கூறிவிடுகிறார். மனநிம்மதியுடன் அனைவரும் விடு திரும்புகிறார்கள்.லச்மணனின் தாயாரும் ஆறுதல் அடைகிறாள். விஷயம் கேள்விப்பட்ட அவன் தந்தையும் மாலையே வீடு திரும்பிவிடுகிறார். தன் மகனை மார்போடு அணைத்துக்கொண்டு கண்ணிர்விடுகிறார்.இது நடந்து கொண்டு இருக்கும் போதே மீண்டும் அதே அலறல். ஆனால் இம்முறை மயங்க வில்லை.தொடர்ந்து கூச்சல் இட்டுக் கொண்டே இருக்கின்றான்.இதுவரை தமிழே ஒழுங்காக பேசத் தெரியாதவன் சமஸ்க்ருத ஸ்லோகங்களை பாராயணம் செய்ய ஆரம்பித்தான். அவனை ஒருத்தராலும் கட்டுப் படுத்த முடியவில்லை. நள்ளிரவு மட்டும் புலம்பிவிட்டு உறங்கி விடுகிறான். காலையில் ஒன்றும் நடக்காததைப் போன்று எழுந்து ஆற்றுக்கு செல்ல புறப்பிடுகின்றான்.அவனைத் தடுத்து நிறுத்துகின்றார் தந்தை. மீண்டும் ஆக்ரோஷமும் கூச்சலும் ஆரம்பமாகிறது.தந்தையோ அருகில் உள்ளவரை துணைக்கு அழைத்து அவனை கயிறு கொண்டு கட்டி மருத்துவரிடம் கொண்டு செல்கிறார்கள். மீண்டும் அதே மாதிரி மருத்துவமனை நெருங்கும் பொது சரியான நிலைமைக்கு வந்துவிடுகிறான். மருத்துவரும் ஒன்றும் இல்லை என்று பழைய பல்லவியே பாடுகிறார்.இதே கதை ரெண்டு வாரங்களாக தொடர்கிறது. செய்வதறியாமல் லச்மணனின் தாயாரும் தந்தையும் சோகக் கடலில் மூழ்கிவிடுகின்றனர்.தன் மகனை ஏர்வாடியில் சேர்க்க முடிவெடுக்கின்றனர்.விஷயம் கேள்விப் பட்ட உறவினர் ஒருவர் இவனைக் காண வருகிறார்.சங்கிலியால் கட்டப்பட்ட அவனைக் காணமுடியாமல் நிற்கிறார். பின்னர் நடந்தவற்றை விசாரித்து அறிகிறார்.மருத்துவர் ஒரு குறையும் கூறவில்லை என்பதால் அவனை தனக்கு தெரிந்த
கோவிலில் உள்ள சாமியாரிடம் காட்டிப் பார்க்கலாம் என்று அவன் தந்தையிடம் கூறுகிறார். முதலில் மறுத்த தந்தை பின்பு ஒப்புக் கொள்கிறார். இருவரும் அந்த சாமியாரிடம் செல்கிறார்கள்.சாமியார் முதலில் பையனை அழைத்து வரச் சொல்கிறார்.நிலைமை ரொம்ப கொடுமையாய் இருக்க என்ன செய்வதென்று புரியாமல் இருவரும் நிற்கிறார்கள். சாமியாரும் நிலைமையைப் புரிந்துவிட தானே அவர் விட்டிற்குச் செல்ல முன்வருகிறார்.தன் காரிலேயே இருவரையும் அழைத்து கொண்டு அவனைக் காண செல்கிறார்.சாமியாரைக் கண்டவுடன் லட்சுமணன் வழக்கமாக திமுருவதை விட பல மடங்கு துள்ளுகிறான்.சாமியார் தன் விபூதியை அவன் மேல் தூவ ஷாந்தமாகிறான். அவனை எடுத்து கொண்டு தன் கோவிலுக்கு அழைத்து செல்கிறார்.போகும் வழியில் உள்ள கல்லறைகளை நெருங்கும் போதெல்லாம் லட்சுமணன் " அய்யோ என்னைக் கூட்டிச் செல்கிறார்களே நீங்களாவது என்னைக் காப்பாற்றுங்கள் இல்லை காரை முன்வரும் லாரியில் தள்ளுங்கள் " என்று கதறியவாறு செல்கிறான். அனைவரும் பீதியில் ரெத்தம் உறைந்து மௌனமாய் வருகின்றனர்.கடைசியில் கோவிலை அடைகிறார்கள்.சாமியார் அவனை பேய் ஓட்டும் அறைக்கு கூட்டிச் செல்கிறார்.அவனை அமர வைத்து கங்கை நீரை அவன் மேல் தெளிக்கிறார்.அந்த பேயானது சாமியாரின் காலில் விழுந்து கதறுகிறது, இரக்கம் காட்டுமாறு கெஞ்சுகிறது. எதற்கும் மசியாத சாமியார் "நீ எங்கிருந்து வருகிறாய் ?" என்று கேட்கிறார். அதற்கு பேயானது ஆத்துல இருந்து வருகிறேன் என்று கூறுகிறது.அந்த சைத்தான் வந்த இடத்தை அறிந்த சாமியார் அவசர அவசரமாய் ஒரு பூஜை செய்கிறார் .எனினும் பேய் லச்மணனை விட்டு நீங்க மறுக்கிறது. கோபம் கொண்ட சாமியார் அதனை பிரம்பெடுத்து அடிக்கிறார். வலி தாங்காமல் அனைத்து உண்மைகளையும் அவரிடம் ஒப்புக் கொள்கிறது அந்த பேய்.தான் அக்ரகாரத்தில் இருந்து வருவதாகம்,ஒரு தாழ்ந்த ஜாதிப் பையனை காதலித்ததால் தன்னை தன் அண்ணனே கொன்று அருகில் இருந்த கிணற்றில் புதைத்து விட்டதாகவும்
,அன்று முதல் அந்த அக்ரகாரத்தில் இருந்த அனைவருக்கும் தொல்லை தந்து வந்ததாகவும் அதனால் கேரளாவில் இருந்து நம்பூதிரிகளை அழைத்து தன்னை ஒரு கலையத்தில் அடைத்து ஆற்றில் விட்டதாகவும், அந்த கலையத்தைத் எடுத்து விளையாடிய லச்மணனை தொற்றிக் கொண்டதாகவும் கூறி முடிக்கிறது அந்த பேய். சாமியாரும் அந்த பெண்ணின் ஆன்மாவுக்கு சாந்தி அளித்து அனுப்பி விடுகிறார். லச்மணனும் குணமாகிரான்.மிகுந்த மகிழ்ச்சியுடன் அனைவரும் வீடு திரும்புகின்றனர்.
அனைத்தும் முடிந்துவிட சாமியாருக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது.அது என்னவென்றால்" லச்மனனுக்குப் பிடித்த பேயை விரட்டி விட்டோம், ஆனால் மனித சமுதாயத்தைப் பிடித்த இந்த ஜாதிப் பேயை எப்படி விரட்டுவோம் என்பதுதான்"

எழுதியவர் : ராஜேஷ் கிருஷ்ணன் (31-Oct-13, 12:12 am)
பார்வை : 199

மேலே