வெற்றிக்கு ஏது விலை
சறுக்கிய நிமிடங்களில்
சங்கடம் தேவையில்லை
போராட்டம் ஒன்றை விட
வெற்றிக்கு ஏது விலை ?
இருட்டினில் நடக்கையிலே
நிழலும் தொடர்வதில்லை
நேர்மையின் பாதைகளில்
நெஞ்சினில் அச்சமில்லை
விழுவதும் எழுவதும் தான்
உலகின் உண்மை நிலை
முழுவதும் வென்று விட்டால்
வாழ்க்கையில் ஏது சுவை
பாவிகள் காலமிது
பார்த்து நீ பாதம் விடு
தூங்கிடும் நேரத்திலும்
விரல்களில் அசைவு கொடு